Press "Enter" to skip to content

கணவரைத் திருப்திபடுத்த மூன்று பெண்கள் தேவை;மனைவியின் வினோத விளம்பரம்

தாய்லாந்தைச்  சேர்ந்த பெண்  ஒருவர் தன் கணவரைக்  கவனித்துக்  கொள்ள பெண்கள் தேவை என வெளியிட்ட விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தைச்  சேர்ந்த ‘பதீமா சாம்னன் ‘ எனும் 44 வயதான பெண்ணொருவரே இவ்வாறு ‘ தனது கணவரைக்  கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும், அவரை சந்தோஷமாக வைத்து கொள்ளவும் மூன்று பெண்கள் தேவை” என  விநோத விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வீடியோப் பதிவாக வெளியிட்ட விளம்பரத்தில் “என்னுடைய கணவனை கவனித்து கொள்வதற்கு மூன்று பெண்கள் தேவை. அவர்கள் அழகாகவும், இளமையாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

அவர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படும், அத்துடன் இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு வழங்கப்படும்,  அவர்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் வராது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும். மீதமுள்ள ஒருவர் என் வீட்டை கவனிப்பதோடு என் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரின் அனைத்துத்  தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

அத்துடன் எனது  கணவர் மிகவும் கடுமையாக உழைப்பவர். அவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன். அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்து கொள்ள எனக்கு ஆட்கள் தேவை.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்து விளம்பரமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *