தம்மை நாடு கடத்தும் உத்தரவை ரத்துசெய்ய உத்தரவிடக்கோரி, பிரித்தானிய பெண்ணாக கெய்லி ப்ரேஸரினால் தாக்கல்செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.
மருத்துவ விசாவில் இலங்கை வந்த நிலையில், காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்து காணொளி வெளியிட்ட கெய்லி பிரேஸர் என்ற பிரித்தானிய பெண்ணின் விசாவை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ரத்துசெய்ததுடன், ஆகஸ்ட் 15க்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
எவ்வாறாயினும், தம்மை நாடு கடத்துவதற்கு எதிரான தீர்மானத்தை ரத்துசெய்ய உத்தரவிடுமாறு கோரி, இந்த மனுவை குறித்த பிரித்தானிய பெண் தாக்கல் செய்திருந்தார்.
Be First to Comment