Press "Enter" to skip to content

பாடசாலை மாணவியை சீரழித்த ஐவர் அதிரடி கைது!

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் லக்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேசிய சிறுவர் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் லக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.பி.ஏ.ரணவீர, சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதி காவல்துறை பரிசோதகர் கயானி பண்டார உள்ளிட்ட பொலிஸ்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறுமி தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் 19 மற்றும் 39 வயதுடைய லக்கல கலேய பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவியை சீரழித்த ஐவர் அதிரடி கைது! | Five Arrested For Corrupting A Schoolgirl

 

சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் இருவர் பற்றிய தகவல்கள் வெளியாகி அவர்களைக் கைது செய்ய காவல்துறை குழுவொன்று அனுப்பப்பட்ட போதிலும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லக்கல பிரதேசத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வரும் இந்த சிறுமி பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் வறுமை மற்றும் சமூக விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் யாரும் உரிய கவனம் செலுத்தவில்லை என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் குறித்து லக்கல காவல் நிலைய தலைமை ஆய்வாளர் பி.பி.ரணவீர, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி , பிரதி பொலிஸ் பரிசோதகர் கயானி பண்டார ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *