3,120 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லாஃப் முனையத்தில் தற்போது எரிவாயு தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் கொள்வனவு செய்யும் வகையில், எரிவாயு நிரப்பும் பணி நிறைவடைந்ததும் சந்தைக்கான எரிவாயு விநியோகம் இடம்பெறுமெனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
லாஃப் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது!
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment