Press "Enter" to skip to content

விஜய்க்கு 1.50 கோடி அபராதம்…

நடிகர் விஜய், கடந்த 2016-17-ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த போது அதில், அந்த ஆண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிபிட்டுள்ளார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

இதையடுத்து, இந்த வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *