ஐக்கிய இராச்சியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வர்த்தகத் திட்டத்தினால் இலங்கை பயனடையவுள்ளது.
இதனை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் புதிய வர்த்தகத் திட்டம் ((DCTS)) இலங்கைக்கு பயனளிக்கும் என்றும், பித்தானியாவுக்கான வரியில்லா ஏற்றுமதியின் மூலம் இலங்கையும் தொடர்ந்து பயனடையும் என்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் இன்று தெரிவித்துள்ளது.
இதன்கீழ் இலங்கையில் 85 வீத ஏற்றுமதி பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு உதவும் வகையில் இந்த வர்த்தகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்று பிரித்தானிய சர்வதேச வர்த்தகத் துறையின் வெளியுறவுத்துறை செயலர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் கூறியுள்ளார்.
இந்த வர்த்தகத் திட்டம் இலங்கை உட்பட்ட 65 நாடுகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment