கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்று அகதியாகக் காலம் கடத்திய பெண் ஒருவருக்கு அபுதாபியில் லொத்தர் சீட்டில் பெருந்தொகை பரிசு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் வசித்த அவர், திருமணத்துக்குப் பின் அபுதாபியில் வேலைக்குச் சென்றார். அங்கு வாங்கிய லொத்தர் சீட்டுக்கு ஒரு மில்லியன் அபுதாபி திர்ஹம் பெற்றுள்ளார்.
இலங்கை நாணயத்தில் எண்பத்தி இரண்டு மில்லியன் ரூபாவை பரிசாக இவ்வாறு லொத்தர் சீட்டில் வென்றுள்ளார்.
80 லொத்தர் சீட்டுகளை வாங்கிய அருள்சேகரம் செல்வராணி ஏற்கனவே விடுமுறையில் தமிழகம் வந்திருந்த நிலையில் லொத்தர் சீட்டில் வெற்றி பெற்றதாகவும், பரிசுத் தொகை குறித்து லொத்தர் நிறுவனம் தெரிவித்த தாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
Be First to Comment