அனுராதபுரம் – மதவாச்சி, மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
மகளின் பாடசாலைக்கு முன்பாக தந்தையினால் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவியை கொலை செய்துவிட்டு பின்னர் சந்தேகநபர் கிருமி நாசினியை உட்கொண்டதில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 3 கூரிய ஆயுதங்களும் சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment