மக்களின் அவலங்களை தீர்ப்பதில் – மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம். அதற்காக ஈ.பி.டி.பி கடந்த காலங்களில் பல சவால்களையும் அசௌகரியமான சூழல்களையும் கடந்து வந்துள்ளது.
ஈ.பி.டி.பி.யின் வழிமுறைகளே சரியானது என்பதை வரலாறு நிரூபித்து வருகின்ற போதிலும், போதிய மக்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை.
இந்த நிலையை மாற்றவேண்டும். அதற்காக காலம் எம்மை தேடிவரப் போவதில்லை வரும் உருவாகின்ற சூழல்களை எமக்கானதாக உருவாக்க வேண்டும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தனது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தினார்.
Be First to Comment