இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு மன்னாரில் 286 மெகாவோட் மற்றும் பூநகரியில் 234 மெகாவோட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான முதலீட்டில் தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சர் இன்று மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளை சந்தித்தார்.
இந்தநிலையில் மின்சாரசபையின் சட்டத் திருத்தங்களால் தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்கள் அடுத்த வாரம் கையெழுத்திடப்படும் என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
Be First to Comment