மன்னார், பேசாலை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் மீனவர் ஒருவரின் வாடிக்குதீவைக்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
03 மீன்பிடி படகுகளும் 03 புத்தம் புதிய படகு இயந்திரங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மீனவர்களால் பிடிக்கப்பட்ட 500 கிலோ இறால், 100 கிலோவுக்கு மேல் மீன்கள் மற்றும் பல வலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பதற்கு முன்னர் பேசாலை பகுதியில் மீனவர்கள் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பேசாலை பொலிஸில் முறைப்பாடு நிலுவையில் உள்ள நிலையில் மீனவர்களின் வாடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Be First to Comment