நாடாளுமன்றத்தில் சுயேச்சைக் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியிடப்படும் எனவும், அதன் தலைவர் பதவியை தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
இன்று (17-08-2022) பிற்பகல் அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Be First to Comment