Press "Enter" to skip to content

ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு வந்த முகநூல் காதல்

வெளிநாட்டிற்கு சென்ற ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர், நாடு திரும்பி பேஸ்புக் காதலனுடன் வசித்து வந்த நிலையில், பொலிசாரின் தலையீட்டால் மீண்டும் கணவர் மற்றும் பிள்ளைகள் அழைத்துச் சென்ற சம்பவம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது.

பொலன்னறுவை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயாவார். இவரது கணவருக்கு 49 வயது. விவசாயி. நாட்டின் நிலைமை மோசமாக தொடங்கியதையடுத்து வாழ்க்கை நடத்த முடியாததால், ஓரு வருடம் எட்டு மாதங்களுக்கு முன், ஓமன் நாட்டுக்கு வேலைக்குச் சென்றார்.

முகநூல் காதலால் ஏமாந்த இளைஞர்; பொலிஸார் கூறிய தகவலால் அதிர்ச்சி | Youth Deceived By Facebook Love Shocked

முகநூல் காதல்

ஓமானில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, ​​மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞருடன் பேஸ்புக் மூலம் காதல் வயப்பட்டுள்ளார்.

தனக்கு திருமணமாகி ஐந்து பிள்ளைகளின் தாய் என்பதை அந்த இளைஞனிடம் சொல்லவில்லை. கடந்த பெப்ரவரி மாதம் ஓமானில் இருந்து இலங்கை வந்த இந்த பெண் மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனின் வீட்டிற்கு வந்து அவருடன் குடும்ப வாழ்க்கையை கழித்துள்ளார்.

முகநூல் காதலால் ஏமாந்த இளைஞர்; பொலிஸார் கூறிய தகவலால் அதிர்ச்சி | Youth Deceived By Facebook Love Shocked

இந்நிலையில் மனைவி நாடு திரும்பியதையும், ஆனால் வீடு வராததையும் அறிந்து கொண்ட கணவன், மனைவியின் நண்பிகள் மூலம், விடயத்தை தெரிந்து கொண்டார்.

மினுவாங்கொடையில் மனைவி பேஸ்புக் காதலனுடன் வசித்து வருவதை கண்டு பிடித்த கணவன், மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இதையடுத்து, ஐந்து பிள்ளைகளின் தாயையும் இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிசார் விசாரணை மேற்கண்டனர்.

முகநூல் காதலால் ஏமாந்த இளைஞர்; பொலிஸார் கூறிய தகவலால் அதிர்ச்சி | Youth Deceived By Facebook Love Shocked

பொலிஸ் விசாரணை வரை, தனது பேஸ்புக் காதலிக்கு திருமணமானதோ, 5 பிள்ளைகள் உள்ளதோ பேஸ்புக் காதலனிற்கு தெரிந்திருக்கவில்லையாம்.

பொலிஸார் விடயத்தை கூறிய பின்னரே உண்மையை அறிந்துகொண்ட இளைஞர், பெண்ணை குடும்பத்தினருடன் செல்ல அனுமதித்தாராம்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *