பனை அபிவிருத்தி தொடர்பான துறைசார் அனுபவங்களைக் கொண்டவர்கள், பனை அபிவிருத்தி சபையின் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்பார்ப்பிற்கு அமைய இருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள செல்லையா செல்வராசா, கந்தராஜா இளங்கோ ஆகியோருக்கான நியமனக் கடிதங்களை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார். – 18.08.2022
Be First to Comment