சுமார் 300 இற்கும் மேற்பட்டோருக்கு உடனடி வேலைவாய்ப்பினையும் நாட்டிற்கு சிறந்த அந்நியச் செலாவணியையும் வழங்கக்கூடிய கடல் பாசி செய்கையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ள தனியார் முதலீட்டாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை இன்று சந்தித்து தமது திட்டங்களையும் பயன்படுத்தவுள்ள நவீன தொழில்நுட்ப முறைமைகள் பற்றியும் தெளிவுபடுத்தினர்.
முதலீட்டாளர்களின் ஆர்வத்தினை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கும் மக்களும் நன்மையளிக்க கூடிய திட்டங்களுக்கு தன்னுடைய பூரண ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – 18.08.2022
Be First to Comment