பாரிய ஆர்ப்பாட்டங்களிற்கு மத்தியில் கடந்த மாதம் நாட்டிலிருந்து தப்பிவெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்தவாரம் இலங்கை திரும்பவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர வட்டாரங்கள் கோட்டாபய இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவித்துள்ளன என அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.உத்தியோகபூர்வமாக எங்களிற்கு அவரது விஜயத்துடன் எந்த தொடர்பும் இல்லை அவர் இலங்கை பிரஜை அவர் தனது விருப்பத்தின்படி பிரயாணம் செய்யலாம் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
Be First to Comment