Press "Enter" to skip to content

யாழில் 17 வயது சிறுமிகளிடம் கூடா உறவு வைத்துமோசமாக நடத்துகொண்ட ஐவருக்கு நேர்ந்த கதி

யாழில் 17 வயது சிறுமிகள் இரண்டு பேரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் 17 வயது சிறுமிகளிடம் மோசமாக நடத்துகொண்ட ஐவருக்கு நேர்ந்த கதி | Five Mans Misbehaved With17 Year Old Girls Jaffna

இக் கைது நடவடிக்கை நேற்று (16-08-2022) இடம்பெற்ற நிலையில் சிறுமிகள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாவது,

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி வந்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர்.

 

யாழில் 17 வயது சிறுமிகளிடம் மோசமாக நடத்துகொண்ட ஐவருக்கு நேர்ந்த கதி | Five Mans Misbehaved With17 Year Old Girls Jaffna

அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

இருப்பினும், நேற்றுமுன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர் .

அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர் நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழில் 17 வயது சிறுமிகளிடம் மோசமாக நடத்துகொண்ட ஐவருக்கு நேர்ந்த கதி | Five Mans Misbehaved With17 Year Old Girls Jaffna

அதன்போது சிறுமி ஒருவர் சாதூரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார்.

வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

 

யாழில் 17 வயது சிறுமிகளிடம் மோசமாக நடத்துகொண்ட ஐவருக்கு நேர்ந்த கதி | Five Mans Misbehaved With17 Year Old Girls Jaffna

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை குறித்த இரு சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *