யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அங்குள்ள சிலரின் தனிப்பட்ட அரசியல் சுயலாபங்களுக்கான போராட்டமே என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கூறியிருக்கின்றது.
இது குறித்து மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்றைய தினம் வியாழக்கிழமை கிளிநொச்சி தொழில்நுட்ப பீட கட்டிட திறப்பு விழா இடம்பெற இருந்த நிலையில் சில மாணவர்களினால் திறப்பு விழாவில் எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் தொடர்பில்லை.
குறித்த போராட்டம் இடம்பெறப்போவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கோ அல்லது கிளிநொச்சி தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்திற்கோ தொியப்படுத்தாத நிலையில் குறித்த போராட்டம் அரசியல் சுயலாபத்துக்காக இடம் பெற்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
மாணவர்களின் நியாயமான கோரிக்கையை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் துணை நிற்கும். ஆகவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Be First to Comment