ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு திக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக தான் இன்றைய தினம் கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வருகை தந்ததாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரி துலாஞ்சி பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு திக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக நான் இன்றைய தினம் கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டேன்.
வீடு தீக்கிரையாக்கப்பட்ட அன்று ஆர்ப்பாட்ட இடத்தில் நானும் நின்றிருந்ததால் விசாரணைக்காக என்னை அழைத்திருந்தனர்.
மிகவும் சுமூகமான முறையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறே கோரினர்.
அதற்கமைவாக நான் எனது பதிலை வழங்கினேன். மிகவும் சுமூகமான முறையில் விசாரணை இடம்பெற்றது.
வாக்குமூலமளித்தன் பின்னர் விசாரணை எனது விசாரணை முடிவுற்றது. எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை.
ஒவ்வொரு போராட்டங்கள் உள்ளன. போராட்டம் என்பது ஒரு போராட்டம் மட்டுமல்ல. ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியிலேயே போராட்டங்களை முன்னெடுத்தனர்.
வாக்குமூலமளிப்பதற்காக வருமாறு கூறியபோது நாம் வந்து வாக்குமூலத்தை அளித்தோம். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
Be First to Comment