தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் பெருமளவு வீழ்ச்சி
Digital News Team 2022-08-19T18:34:44
-சி.எல்.சிசில்-
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை பெருமளவு குறைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய சந்தைககளில் மொத்த மற்றும் சில்லறை மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
550 முதல் 600 ரூபா வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட போஞ்சி 220-300 ரூபாவுக்கும், வெண்டைக்காய் 100 ரூபாவுக்கும் விற்கப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கறி மிளகாய், கத்தரிக்காய் தவிர அனைத்துக் காய்கறிகளும் தற்போதைய விலையை விட 50% குறைவாக விற்கப்படுவதாகவும், காய்கறிகளை மிகக் குறைந்த விலையில் விற்க நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலை (ரூ.)
- கோவா 160 -180
- போஞ்சி 220 – 240
- லீக்ஸ் 100 – 130
- கரட் 220 – 280
- பீட்ரூட் 55 – 70
- தக்காளி 180-200
- முள்ளங்கி 50 – 80
- நோகோல் 120 -150
- வெள்ளரிக்காய் 50 -70
- உருளைக்கிழங்கு 130 -140
- பீர்க்கங்காய் 130 -150
- வெண்டைக்காய் 40 – 70
- புடோல் 160 -180
- பாகற்காய் 250 -280
- பூசணி 120 – 130
- கத்திரிக்காய் 320 – 350
- பயற்றங்காய் 90 – 120
- சிறகவரை 160 -200
- பச்சை மிளகாய் 320-350
- கறி மிளகாய் 450 – 500
- தக்காளி 160 -220
- பெரிய வெங்காயம் 130-140
Be First to Comment