Press "Enter" to skip to content

நான்காவது கொரோனா தடுப்பூசி அவசியம் : ஹேமந்த ஹேரத்

கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில், மக்கள், நான்காவது கொரோனா தடுப்பூசியை, விரைவாக செலுத்திக் கொள்ள வேண்டும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில், குறைந்த எண்ணிக்கையான மக்களே, நான்காவது தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
மூன்றாவது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.
நான்காவது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு, பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டதாக, இதுவரை பதிவாகவில்லை.
இவ்வாறான நிலையில், நாளாந்தம் 100 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *