20 August 2022 newsletter
பருத்தித்துறை டிப்போவுக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன டக்ளஸ் தேவானந்த அவர்கள் விஜயம் –
யாழ்ப்பாணத்துக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன அவர்கள் பருத்தித்துறை டிப்போவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இவ்விஜயத்தின்போது யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த விஜயத்தின்போது, பருத்தித்துறை டிப்போ எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கைப் போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கான வீதிகள் காப்பெற் வீதிகளாகப் புனரமைத்துத் தரப்படும் என தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன, பணியாளர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட ஏனைய விடயங்களும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும பணியாளர்களினால் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் 12 ஆண்டுகாலமாக, அப்போதைய பிராந்திய முகாமையாளர்களால் உள்ளீர்க்கப்பட்டு நிரந்தர நியமனமின்றி பணியாற்றுவோருக்கான நியமனம் தொடர்பில் விசேட பொறிமுறையொன்றை ஏற்படுத்தி தீர்வு காணப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
Be First to Comment