கொள்ளுப்பிட்டி – 19 ஆவது ஒழுங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (20) இரவு குறித்த நபர் இந்தக் கட்டிடத்தின் 16ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்வத்த – பதுரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் 16வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர், சில தேவைக்காக தரை தளத்திற்கு செல்ல முயன்ற போது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. நீதிவான் விசாரணைகள் நடத்தப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment