திருகோணமலை – கும்புறுப்பிட்டி கலப்பு பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிண்ணியா-முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த ஏ எஸ்.முகம்மது அன்வர் (45 வயது) என்பவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
உயிரிழந்த நபர் கிண்ணியாவிலிருந்து தொடர்ச்சியாக மீன்பிடிப்பதற்காக குச்சவெளிக்கு வருகை தருவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Be First to Comment