மணல் கடத்திவந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் துன்னாலை – குடவத்தை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை புலோலி – கொடிகாமம் வீதியில் முள்ளி பகுதியில் மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் ஜெ.ஜெயந்தன் (வயது- 27) என்ற இளைஞனே உயிரிழந்தார்.
மணல் கடத்தி வந்த கப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் படுகாயங்களுக்கு உள்ளான இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Be First to Comment