வசந்த முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்களிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்
தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
மனித உரிமை பாதுகாவலர்கள் வசந்த முதலிகே ஹசான் ஜீவந்த கல்வே ஸ்ரீதம்ம ஹிமி ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.
ரணில் தடுத்துவைப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடக்கூடாது அப்படி செய்தால் அது இலங்கைக்கு மோசமான நாளாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment