ஐக்கிய மக்கள் சக்தியின் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் ஐ.தே.கவில் இணையத் தீர்மானம்
Digital News Team 2022-08-22T16:11:15
-சி.எல்.சிசில்-
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அரசியல் செய்யத் தீர்மானித்துள்ளனர்.
கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தா வுக்கு வந்த அவர்களின் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப் புரிமையைப் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவது குறித்து ஆலோசித்து வருகிறது.
அதில் இரண்டு அல்லது மூன்று பேர் அமைச்சுப் பதவிகளைப் பெறத் தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது.
Be First to Comment