மன்னார், நெடுகுடா கடற்கரைப் பகுதியில் கடந்த 20ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, கடலில் குவிக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளர்.
மன்னார் நெடுகுடா கடற்கரை பகுதியில் நடாத்திய விசேட ரோந்து நடவடிக்கையின் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு நீருக்குள் புதைக்கப்பட்டுள்ளதை மன்னார் கடற்படையினர் கைப்பற்றியுள்ளர்.
கடத்தல்காரர்காலால் கடல்வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் மருந்துகளை கொண்டு வர முயற்சித்து அவற்றை கொண்டு வர முடியாமல் கைவிட்டிருக்கலாம் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் மொத்த சந்தைப் பெறுமதி 4.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுவதாக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
Be First to Comment