Press "Enter" to skip to content

கிளிநொச்சியில் நகைக்கடை உடைத்து கொள்ளையடித்தவர் தமிழகத்துக்கு அகதியாக ஓடினார்

கிளிநொச்சியில் இடம்பெற்ற நகைக்கடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தமிழகத்தில் அகதியாக பஞ்சம் புகுந்துள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த இரு நாட்களில் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த 16 பேரில் ஒருவர் கிளிநொச்சியில் இடம் பெற்ற நகைக்கடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் என போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த 16 பேரிடமும் தமிழக கடலோர காவல் படையினர் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை தஞ்சம் கோரி சென்றவர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் 16 நபர்களில் ஒருவர் கிளிநொச்சி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றினை உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்ற செயலின் பிரதான சந்தேக நபர் என கண்டறிந்துள்ளனர்.

குறித்த நபர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையில் இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்றுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனையவர்கள் தொடர்பிலும் இலங்கை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *