இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து, நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மற்றுமொருவர் கறுவாத்தோட்ட பொலிஸில் சரணமடைந்துள்ளார்.
சமிந்த கெலும்பிரிய அமரசிங்க (வயது 45) என்பவரே இவ்வாறு சரணடைந்துள்ளார். இவர் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்த இரண்டாவது நபராவார்.
இதேவேளை, ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்த நடிகர் ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது
Be First to Comment