புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்பனே கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கிராம்மொன்றில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில், குறித்த சிறுமியின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என புளத்கொஹுபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 56 வயதான 3 பிள்ளைகளின் தந்தை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இந்த மாதம் 19ஆம் திகதி குறித்த சிறுமி இரவு நேரத்தில் தனது தந்தையால் தனக்கு நேரும் விடயங்கள் குறித்து வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆசிரியரால் அதிபருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சிறுமியின் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Be First to Comment