வாரம் ஒன்றுக்கு பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1500ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
மேலும், இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 50,500 என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் கணிசமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
டெங்கு,கொரோனா மற்றும் இன்புளுவென்சா ஆகியவை இந்த நாட்களில் பரவி வரும் நிலையில், அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் அவர் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் முழுமையான இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்
Be First to Comment