மூன்று கிலோ அரிசி மற்றும் சமபோஷ பொதியை கடையொன்றில் பணம் கொடுக்காமல் எடுத்துச் செல்ல முற்பட்ட 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையை கடைக்காரர்கள் பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் விசாரித்த பொரளை நிலைய பொறுப்பாளர் அடுத்து எடுத்த நடவடிக்கை அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
குறித்த சந்தேக நபர் பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மேசன் வேலையில் உதவியாளராக தினக்கூலி வேலைகளைச் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலைக் காரணமாக தினசரி வேலை எதுவும் கிடைக்காமல், அவரது குடும்பம் பசி பட்டினியால் வாடியது .
குடும்பத்தின் பசி போக்க ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பொரளை பல்பொருள் அங்காடிக்கு சென்று மூன்று கிலோ அரிசி மற்றும் போஷாக்குணவு பொதிகளை எடுத்துக் கொண்டு காசு கொடுக்காமல் கடையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளார். இவ்வேளை அங்கிருந்த பாதுகாப்பு காவலர்களிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.
காவலர்கள் பொருட்களுடன் சந்தேக நபரை பொரளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொரளை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் சந்தேக நபரை பற்றிய அனைத்து தகவல்களையும் விசாரித்துளார். குழந்தைகளின் பசியைப் போக்கத்தான் இவர் இவ்வாறு செய்துள்ளார் என்பதை உணர்ந்த பொலிஸ் பரிசோதகர் தனது பையில் இருந்து ஆயிரம் ரூபாவை கொடுத்து கடையில் குறித்த நபர் வாங்கிய பொருற்களுக்கான 840/= ரூபா பணத்தைச் செலுத்தியுள்ளார். அத்தோடு சந்தேக நபருக்கு அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து பொரளை பிரதேசத்தை சேர்ந்த தேரர் ஒருவர் குறித்த நபரை அழைத்து சில உதவிகளை வழங்கியதுடன் நல்ல பிரஜையாக வாழ்க்கையை நடத்துமாறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment