வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக இராமச்சந்திரன் சுரேன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்றைய தினம்(23.08.2022) வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
உறுப்பினர்களிடையே இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது சுயேட்சை அணி எட்டு வாக்குகளையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 8 வாக்குகளையும் பெற்று போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் சமநிலையில் காணப்பட்டமையால் குலுக்கல் முறையில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதனடிப்படையில் நகரசபையின் புதிய தவிசாளராக சுயேற்சைக்குழுவைச் சேர்ந்த இராமச்சந்திரன் சுரேன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Be First to Comment