இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களின் அன்றாடச் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எடுத்துரைத்தார்.
கடற்றொழில் திணைக்களத்தின் விற்பனையை அதிகரிப்பதற்கு சாத்தியமான வழிவகைகளை மேலும் விஸ்தரிக்குமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலையில் அமைந்துள்ள கடற்றொழில் திணைக்களத்தின் மீன் சந்தையை விஸ்தரிப்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.
Be First to Comment