இலங்கையுடன், தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை, மேலும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான நட்புறவை, மேலும் வலுப்படுத்துவதே, எமது எதிர்பார்ப்பாகும்.
கடந்த காலங்களில், இலங்கையுடனான உறவு தொடர்பில், தென்னாபிரிக்கா விசேட கவனம் செலுத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும், பரஸ்பர புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதில், தென்னாப்பிரிக்கா, தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தும் என தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிறில் ரமபோசா குறிப்பிட்டுள்ளார்
இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை மேம்படுத்த தென்னாபிரிக்கா விருப்பம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment