விற்பனை நிலையம் ஒன்றில் இருந்த இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கும்பல் மத்துகம போபிட்டிய பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையமொன்றினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று (23) இரவு கறுப்புப் பாதுகாப்பு தலைக்கவசம் மற்றும் கோட் அணிந்து விற்பனை நிலையமொன்றினுள் நுழைந்த இருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலில், எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாத, கடைக்கு வந்திருந்த அப்பாவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மற்றைய நபர் மத்துகம ஷானுடன் சிறிது காலம் பழகி பின்னர் பிரிந்து சென்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் முன்னாள் ஆசிரியர் என்பதும், ´ஷான்´ என்பவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்திருந்தமையும் தெரியவந்துள்ளது
Be First to Comment