நாளை (26) முதல் தனியார் பஸ் சேவை 50 வீதத்திற்கு மேல் குறைவடையலாம் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன, நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி உருவாகி வருவதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்து சபையிடம் இருந்து முறையாக டீசல் வரவில்லை என்றும், இன்றும் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றும் தென் மாகாணத்தில் பல பேருந்துகள் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அரசாங்கத்திடம் இருந்து விரைவான பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
Be First to Comment