இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கான புதிய நியமனங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்ப்ளராக திரு. துஸார நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கடற்றொழில் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திரு. எம்.ஐ.முருகன்(எம்.ஐ.ஸ்ராலின்) நியமிக்கப்பட்டுள்ளதுடன், நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக, கடற்றொழில் அமைச்சரின் இன்னுமொரு ஒருங்கிணைப்புச் செயலாளரான திரு. G. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள குறித்த நிறுவனங்களின் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றின் செயல் திறனை அதிகரித்து, ஒழுங்குபடுத்தும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment