Press "Enter" to skip to content

நல்லூரில் 30 பவுண் நகை அபேஸ் செய்த 4 பெண்கள்!

நல்லூரான் தேர் உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை 30 பவுண் நகை அபேஸ் செய்த நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவமான நேற்று மாத்திரம் 30 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒரு சிறுவன் மற்றும் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளின் பின்னர் நல்லூர்க் கந்தனின் தேர்ப்பவனி நேற்று இடம்பெற்றது . இதனால் அதிகளவான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.

நல்லூரில் 30 பவுண் நகை அபேஸ் செய்த 4 பெண்கள்! | 4 Women Made30 Pounds Of Jewelery In Nallur

 

சன நெரிசலை சாதகமாக்கிய திருடர்கள் தங்கள் கைங்கரியத்தைக் காட்டினர். 2 தாலிக்கொடி மற்றும் சங்கிலிகள் உட்பட 30 பவுண் நகைகள் களவாடப்பட்டதாக நல்லூர் உற்சவகால பொலிஸ் காவலரணில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சங்கிலி அறுக்க முற்பட்டபோது கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார் . அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நீர்கொழும்பைச் சேர்ந்த மேலும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கோப்பாயைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளான் என தெரியவந்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *