நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை புள்ளிவிபரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்றைய தினம் வரையில் மொத்தமாக 22,666 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதில் 8,285 பேர் கைதிகள் எனவும், 14,381 பேர் சந்தேக நபர்கள் எனவும் தெரிவித்துள்ளார்
Be First to Comment