யாழ்ப்பாணம் – பலாலி சந்திப் பகுதியில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க மையம், புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஆரோக்கியம் நிறைந்த, நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு, இராணுவத்தின் பங்களிப்புடன் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நல்லிணக்க மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர், அவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டுள்ள முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும்.
இதன்போது, அவர் அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
Be First to Comment