பொன்னாலை பாலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த ஜெயந்தன் தேவப்பிரியா (வயது 23) என்றே பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கர்ப்பமாக உள்ள நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக காரைநகரில் இருந்து மூளாய் வைத்திய சாலைக்கு மோட்டார் சைக்கிளில் கணவனால் அழைத்து செல்லப்பட்ட நிலையில்,
பொன்னாலை பாலத்தடியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Be First to Comment