வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கரத்தைப் பகுதியில் மிதி வெடிகள் நேற்று மீட்கப்பட்டன என வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சங்கரத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் காணியை வீட்டின் உரிமையாளர் நேற்றுக்காலை துப்புரவு செய்துள்ளார். இதன்போது சந்தேகத்துக்கிடமான முறையில் இரு பொருள்கள் காணப்பட்டதை அவதானித்தார்.
இதன்பின்னர் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமாகக் காணப்பட்ட பொருள்களை அவதானித்து மிதிவெடிகள் என்பதை இனங்கண்டனர். கண்டெடுக்கப்பட்ட மிதிவெடிகளை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Be First to Comment