எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ஏற்பட்டுள்ள வரிசை முறைமை 2 நாட்களில் முடிவுக்கு வரும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
விநியோகத்தில் ஏற்பட்ட தொய்வு, இறக்குவதில் தாமதம் மற்றும் பணம் செலுத்துவதில் தாமதம் ஆகியவைவே நீண்ட வரிசைக்கு காரணம் என அமைச்சர் கூறியுள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படாமையின் காரணமாக மீண்டும் வரிசைகள் உருவாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment