கபினட் அமைச்சர்களாக ஐ.ம.சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர்
Digital News Team 2022-08-27T16:32:52
-சி.எல்.சிசில்-
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர் கபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று இவர்கள் அமைச்சரவையில் இணையவுள்ளனர்.
இவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களாவர்.
சர்வகட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது.
இதன்படி, கட்சிகளாக இல்லாது தனிப்பட்ட எம்.பி.க்கள் என, பல கட்சிகளின் எம்.பி.க்கள் இணைந்து, அரசில் அமைச்சர் பதவிகளைப் பெற உள்ளனர்.
புதிய அமைச்சரவை இன்னும் சில தினங்களில் பதவியேற்கவுள்ளது.
Be First to Comment