Press "Enter" to skip to content

காதலன் நீரில் மூழ்கி காணாமல் போனதால் காதலி தற்கொலை

மாத்தறை, பிடபெத்தர பகுதியில் நில்வலா கங்கையில் நீராடச் சென்ற காணாமல் போன இளைஞனின் காதலி நில்வலா கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காணாமல் போன மனுஷ்க யோஹான் என்பவரின் காதலியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கம்புருபிட்டிய, மீபாவிட்ட, ரன்சகொட பிரதேசத்தில் வசித்து வந்த அஷானி ஹன்சிகா என்ற 19 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (27) காலை தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாத்தறை, பிடபெத்தர, நில்வலா கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்களை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரினால் இன்று (27) கண்டுபிடிக்க முடிந்தது.

எனினும் காணாமல் போன மனுஷ்க யோஹான் என்ற இளைஞரை தேடி தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *