வத்தளை ஹெந்தலயில் கார் மற்றும் அதன் உரிமையாளர் கடத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த காரை ஓட்டிச் சென்ற 20 வயது இளைஞன் கடத்தப்பட்டதாக அவரது சகோதரர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞன்

கடத்தப்பட்டமை தொடர்பில் பல பொலிஸ் விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காணாமல் போன இளைஞனின் சகோதரன் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையின் மூலம் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், உரிமையாளர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்





Be First to Comment