பாதாள உலக குழுவினரின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கையை அதிகாரிகள் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தெற்கு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், காவல்துறை விசேட அதிரடிப் படை காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஏனைய புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முழுமையாக ஒடுக்குமாறு இதன்போது காவல்துறை பிரிவுகளுக்கு அமைச்சர் டிரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகத்தை முழுமையாக ஒடுக்குமாறு, அமைச்சர் பணிப்புரை வழங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment