- முகப்பு
- Local
- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் அரசியலில் நுழைந்தால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் – குமார வெல்கம
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் அரசியலில் நுழைந்தால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் – குமார வெல்கம
By RAJEEBAN
27 AUG, 2022 | 10:53 AM
![image](https://cdn.virakesari.lk/uploads/post/featured_image/134489/thumb_large_kumara1.jpg)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க தேசிய அரசியலில் நுழைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் மகன் அரசியல் நுழைவார் என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை தளமாக அவர் அரசியலில் நுழைவது குறித்த எந்த முடிவை எடுத்தாலும் நான் அந்த இளைஞருக்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுபவம்மிக்க அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இளைஞர்கள் அரசியல் ஈடுபடுவதற்கான சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
நாட்டு மக்கள் வெறுக்கும் குடும்ப அரசியலிற்காக குரல்கொடுக்கின்றீர்களா என்ற கேள்விக்கு வாக்காளர்களின் ஆதரவு காணப்பட்டால் அதில் தவறில்லை என குமார வெல்கம தெரிவித்துள்ளார்
Be First to Comment